Published : 31 Mar 2020 16:46 pm

Updated : 02 Apr 2020 19:14 pm

 

Published : 31 Mar 2020 04:46 PM
Last Updated : 02 Apr 2020 07:14 PM

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுக்கு கரோனா தொற்று இல்லை

israeli-pm-family-test-negative-for-coronavirus

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதும் சுமார் 7 லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தியுள்ளது. 37 ஆயிரம் பேர்வரை பலியாகி உள்ளனர்.

மேலும் உலக அரசியல் தலைவர்கள் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் நெதன்யாகுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, இஸ்ரேலியர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நானே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் 4,000க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர்வரை பலியாகி உள்ளனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

இஸ்ரேல்இஸ்ரேல் பிரதமர்நெதன்யாகுகரோனா வைரஸ்கோவிட்கோவிட் 19கோவிட் காய்ச்சல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author