

காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தான், துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கு நெருக்கமானது என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டு அமர்வில் வெள்ளிக்கிழமை பேசும்போதும், “நமது காஷ்மீர் சகோதர, கசோதரிகள் இந்த துன்பத்தைப் பல வருடங்களாக அனுபவித்து வருகின்றனர்.மேலும் சமீப காலங்களைல் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் அவர்களின் நிலைமை மோசமாகிவிட்டது.
உங்களுக்கு காஷ்மீர் விஷயம் எவ்வளவு நெருக்கமானது அதேபோல் எங்களுக்கும் நெருக்கமானது. காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் அமைதி பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து துணை நிற்கும்” என்றார்.
முன்னதாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஐ.நா. சபை, வல்லரசு நாடுகளிடம் முறையிட்டது. ஆனால், சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
இந்த நிலையில் சவுதி இவ்விகாரத்தை பேச மறுக்க துருக்கி பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை அளித்துள்ளது.
தவறவீடாதீர்