Published : 04 Dec 2019 14:01 pm

Updated : 04 Dec 2019 14:12 pm

 

Published : 04 Dec 2019 02:01 PM
Last Updated : 04 Dec 2019 02:12 PM

தென்கொரியாவில் தொடரும் பிரபலங்களின் மரணம்

south-korean-actor-cha-in-ha-found-dead

தென்கொரிய நடிகரும், பாப் பாடகருமான சா இன் ஹா தனது இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவில் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பாடகர்கள் மத்தியில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது அங்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 27 வயதான தென் கொரிய நடிகரும், பாடகருமான சா இன் ஹா தனது இல்லத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சா இன் ஹா 'You, Deep Inside of Me' என்ற படத்தின் மூலம் கொரியத் திரையுலகுக்கு 2017 ஆம் ஆண்டு அறிமுகமானார்.


சா இன் ஹா மரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் பிரபல பாப் பாடகியான கோ ஹரா கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டடார். முன்னதாக, பிரபல கொரிய பாப் பாடகி சூலி அக்டோபர் மாதத்தில் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் சூலிக்கு எதிரான விமர்சனங்கள்தான் தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

தென்கொரியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் 10 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாதென் கொரிய நடிகர்பிரபலங்கள் மரணம்சா இன் ஹாதற்கொலைகள்

You May Like

More From This Category

More From this Author