Published : 28 Nov 2019 03:49 PM
Last Updated : 28 Nov 2019 03:49 PM

சீனாவில் முஸ்லிம்கள் மீதான ஒடுக்கம்: இளம்பெண்ணின் கணக்கை நீக்கிய டிக் டாக்

உகர்ஸ் இன முஸ்லிம்கள் சீன முகாம்களில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை அமெரிக்க இளம்பெண் ஒருவர் தனது டிக் டாக் பதிவில் பதிவிட்டது சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து அவரது கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பெரோசா அசிஸ் (17). இவர் தனது டிக் டாக் பக்கத்தில் ஒப்பனை குறித்த வீடியோவில், ''சீனாவில் சிறுபான்மையினர்களாக உள்ள உகர்ஸ் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம். உடனடியாக உங்கள் தொலைபேசியில் இதுகுறித்துத் தேடுங்கள்'' என்று தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக அவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அவரது வீடியோ வன்முறையைத் தூண்டுவதாக டிக் டாக் அவரது கணக்கைத் தற்காலிகமாக நீக்கம் செய்தது.

— saltys backup (@soIardan) November 24, 2019

இந்நிலையில் பெரோசா அசிஸின் கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டதற்கு டிக் டாக் சார்ப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. அவர் உகர்ஸ் முஸ்லிம்களைப் பற்றி கூறியதற்காக அவரது கணக்கு நீக்கப்படவில்லை என்றும் டிக் டாக்கின் விதிகளை மீறும் வகையில் பின்லேடன் பற்றிய வீடியோவிற்காக நீக்கம் செய்யப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

சீனாவில் உகர்ஸ் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்று பிபிசி சமீபத்தில் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x