Published : 08 Oct 2019 08:33 PM
Last Updated : 08 Oct 2019 08:33 PM

அல்-குவைதா தெற்காசியத் தலைவர் அசிம் உமர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார்

காபூல், ஏ.எப்.பி.

அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தெற்காசியக் கிளைத் தலைவர் அசிம் உமர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் அக்டோபர் 8ம் தேதி உறுதி செய்தனர்.

2014-ல் இந்தியத் துணைக்கண்டத்திற்கான அல்-குவைதா ஆரம்பிக்கப்பட்ட போது அசிம் உமர் இதனை வழிநடத்தி வந்ததாக தகவல்கள் எழுந்தன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஹெல்மண்ட் மாகாணத்தின் மூசா குவாலா மாவட்டத்தில் தலிபான்களின் வளாகத்தில் அசிம் உமர் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஆப்கான் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் அசிம் உமரை பாகிஸ்தான் நாட்டவர் என்று கூறியுள்ளது, ஆனால் இவர் இந்தியாவில் பிறந்தவர் என்று வேறு சிலதரவுகள் ஏற்கெனவே வெளியாகின. இது தன் ட்வீட்டில், “அல்-குவைதா இந்தியத் துணைக்கண்ட உறுப்பினர்கள் 6 பேருடன் அசிம் உமர் தாக்குதலில் கொல்லப்பட்டார்” என்று பதிவிட்டுள்ளது. இதில் பெரும்பாலோனோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்கிறது இந்த ட்வீட்.

செப்டம்பர் 22 மற்றும் 23 தேதிகளில் அமெரிக்க வான்வழித் தாக்குதல் படையின் உதவியுடன் ஆப்கன் படை நடத்திய ஒரு நெடிய தாக்குதல் நடவடிக்கையில் அசிம் உமர் கொல்லப்பட்டுள்ளார்.

அல்குவைதா இந்தியத் துணைக்கண்ட உறுப்பினர்களில் கொல்லப்பட்ட ரைஹான் என்பவர் அல்-குவைதா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி என்பவருக்கு தூதராகச் செயல்பட்டுள்ளதாக ஆப்கன் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்தியா, பங்களாதேஷ், மியான்மரில் தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காக இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆப்கன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x