Published : 27 Sep 2019 06:45 PM
Last Updated : 27 Sep 2019 06:45 PM

புலம்பெயர்ந்து கிரீஸுக்கு வந்தவர்கள் படகு கவிழ்ந்து விபத்து: குழந்தை உட்பட 7 பேர் பலி

கிரீஸ் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் வந்த படகு விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 7 பேர் பலியாகினர். சிலர் மாயமாகியுள்ளனர்.

இதுகுறித்து கிரீஸ் கடற்படை அதிகாரிகள் தரப்பில், “ கிரீஸில் உள்ள ஏஜியன் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் வந்த படகு கவிழ்ந்தது. இதில் குழந்தை உட்பட 7 பேர் பலியாகினர். சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. பிற படகுகளில் வந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கிரீஸுக்கு 50,000 அதிகமான மக்கள் சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர் என்றூம் அவ்வாறு வரும் மக்களில் பலரது படகு ஏஜியன் கடலில் விபத்துக்குள்ளாவதாகவும் கிரீஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 50 பேர்வரை இறந்ததாக கிரீஸ் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் சில வற்றில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, ஏமன் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரை பணயம் வைத்து கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல பயணம் மேற்கொள்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x