Published : 18 Aug 2019 07:39 AM
Last Updated : 18 Aug 2019 07:39 AM

பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடானில் உற்சாக வரவேற்பு: இரு நாடுகளுக்கிடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

திம்பு

பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத் தாகின.

கடந்த 2014 மே 26-ம் தேதி முதல்முறையாக பிரதமர் பதவி யேற்ற நரேந்திர மோடி முதல் வெளி நாட்டு பயணமாக அதே ஆண்டு ஜூனில் பூடான் சென்றார். அண்மை யில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த மே 30-ம் தேதி 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற் றார். அவரது பதவியேற்பு விழா வில் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் பங்கேற்றார். அப்போது பூடானுக்கு வருமாறு மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இதையேற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயண மாக நேற்று பூடான் தலைநகர் திம்புக்கு சென்றார். அவரை பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றார். வழிநெடுக பூடான் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் திம்புவில் உள்ள டாசிசோ டிசோங் அரண்மனை யில் இரு நாட்டு பிரதமர்களும் சந் தித்துப் பேசினார். பின்னர் சிம் டோகா டிசோங் மாளிகையில் நடந்த விழாவில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

தெற்காசிய செயற்கைக்கோள்

பூடான் உள்ளிட்ட தெற்கா சிய நாடுகளின் தகவல் தொடர்பு வசதிக்காக கடந்த 2017 மே மாதம் தெற்காசிய செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் நிலைநிறுத்தி யது. இந்த செயற்கைக்கோளை பயன்படுத்த ஏதுவாக திம்புவில் ரூ.7 கோடி செலவில் தெற்காசிய செயற்கைக்கோள் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை பிரதமர் மோடியும் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் கும் இணைந்து திறந்துவைத்தனர். மேலும் ரூபே கார்டு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

நீர்மின் திட்டம் தொடக்கம்

இந்தியாவின் உதவியுடன் ரூ.5,012 கோடியில் அமைக்கப்பட் டுள்ள நீர்மின் திட்டத்தையும் பிரத மர் மோடி பூடானுக்கு அர்ப் பணித்து வைத்தார். மேலும் தகவல் தொடர்பு, விமான விபத்து விசா ரணை, சட்டம், அறிவுசார் சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளிடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதன்பின், இரு நாட்டு பிரதமர் களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். பிரதமர் மோடி கூறும்போது, "இந்தியா, பூடான் இடையேயான பொருளாதார, கலாச்சார உறவுகள் மேம்படுத் தப்படும்" என்று தெரிவித்தார்.

பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் கூறும்போது, "இருநாடு களுக்கு இடையிலான எல்லை எப்போதும் திறந்திருக்கிறது. இரு நாட்டு மக்களின் இதயங்கள் இணைந்திருக்கின்றன" என்று தெரிவித்தார்.

பூடான் ராயல் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார். பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று மதிய விருந்து அளிக்கிறார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x