செய்திப்பிரிவு

Published : 14 Aug 2019 15:45 pm

Updated : : 14 Aug 2019 16:11 pm

 

பிராந்தியத்தை காக்க வெளிநாட்டுப் படைகள் தேவை இல்லை: ஈரான் அதிபர்

iran-and-other-gulf-states-could-protect-the-region-s-security-and-foreign-forces-were-not-needed-rouhani

பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு வெளிநாட்டுப் படைகள் தேவையில்லை என்று அமெரிக்காவை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி புதன்கிழமை அந்நாட்டின் அரசு ஊடகத்தில் பேசும்போது, “பிராந்தியத்தின் பாதுகாப்பை ஈரான் மற்றும் பிற வளைகுடா நாடுகள்தான் காக்க வேண்டும். இதில் வெளி நாட்டுப் படைகள் தேவையில்லை' எனத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, பிராந்தியத்தில் அமைதியற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முயல்கிறது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் தெரிவித்திருந்தார்.

உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான ஹோர்மஸ் நீரிணைப்புப் பகுதியில் ஈரானின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு சர்வதேச கடற்படைக் கூட்டணிக்கு ட்ரம்ப் நிர்வாகம் நட்பு நாடுகளை நாடியிருக்கிறது.

மேலும் கடந்த மாதத்தில் பிரிட்டிஷ் கப்பலை ஈரான் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து வளைகுடா பகுதியில் இங்கிலாந்துக்கு ஆதரவாக கடற்படையை நிறுத்தியுள்ளது

ஈரான் மீது அமெரிக்கா அதிக அழுத்தத்தை அளித்து வரும் நிலையில் அதன் பிராந்தியத்தில் தனது படையை அதிகரித்து வருவதால் வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

IranAmericaஈரான்அமெரிக்காகடற்படைஆக்கிரமிப்பு

Popular Articles

You May Like

More From This Category

More From this Author