Last Updated : 30 Jun, 2015 10:17 AM

 

Published : 30 Jun 2015 10:17 AM
Last Updated : 30 Jun 2015 10:17 AM

உலகின் மிக உயரமான பசு இறந்தது

அமெரிக்காவில் இருந்த உலகின் மிக உயரமான பசு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்துவிட்டதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

இல்லினாய்ஸ் மாகாணம் ஆரஞ்வில்லே கிராமத்தைச் சேர்ந்த ஹான்சன் என்ற பெண்ணுக்கு சொந்தமானது பிளாசம் என்ற பசு. 6 அடி 2 அங்குல உயரம் கொண்ட இந்தப் பசுவை உலகின் உயரமான பசு என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கீகரித்தது.

இந்நிலையில் 13 வயதான இந்த பசுவுக்கு சமீபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்த இந்த பசு அண்மையில் உயிரிழந்ததாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட கின்னஸ் அமைப்பு, உலகின் முதல் உயரமான பசு இதுதான் என்று உறுதிப்படுத்தி உள்ளது.

இதற்கு முன்பு மவுன்ட் கடாதின் என்ற பசு உலகின் உயரமான பசு என்ற பெருமை பெற்றிருந்தது. 1906 1910-ல் வாழ்ந்த இந்த பசு, சுமார் 6 அடி 2 அங்குல உயரம் கொண்டதாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x