Published : 24 May 2015 12:13 PM
Last Updated : 24 May 2015 12:13 PM

என் தந்தை கொடூரமானவர் அல்ல‌: நாஜி படைத் தளபதியின் மகள் பேட்டி

எனது தந்தை உலகத்தினர் கருதுவது போல கொடூரமான வராக இருக்கவில்லை என்று நாஜி படைத் தளபதி ஹீன்ரிச் ஹிம்லரின் மகள் குட்ரன் பர்விட்ஸ் கூறியுள்ளார்.

ஹிட்லரின் நாஜிப் படையில் தளபதியாக இருந்தவர் ஹீன்ரிச் ஹிம்லர். ஜெர்மனியின் ரகசிய போலீஸ் படையான ‘கெஸ்டாபோ'வில் தலைவராக இருந்தவர் இவர். யூதர்கள் பலரைக் கொன்றதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

1945ம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் ஜெர்மனிக்கு எதிராகப் படையெடுத்தபோது, அவர்களின் கையில் சிக்காமல் இருப்பதற்காக‌ சயனைட் குப்பியை விழுங்கி ஹிம்லர் தற்கொலை செய்துகொண்டார்.

அவரின் 70வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது அவரது மகளான குட்ரன் பர்விட்ஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

இந்த உலகத்தினர் கருதுவதைப் போல எனது தந்தை கொடூரமானவர் கிடையாது. என்னைப் பொறுத்தவரை அவர் மிகச் சிறந்த மற்றும் மதிப்பு வாய்ந்த மனிதராக இருந்தார்.

என்னுடைய 14 வயதில் என்னுடைய தந்தையை இழந்தேன். ஹிட்லரிடத்தில் அவர் எவ்வளவு மரியாதை கொண்டிருந்தாரோ, அதே அளவு மரியாதையை என் தந்தை மீதும் வைத்திருந்தேன்.

அவர் விஷக்குப்பியை விழுங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று நான் நம்ப வில்லை. எனது தாயோ அல்லது நானோ இதுவரை அவரின் அதிகாரப்பூர்வமான மரணச் செய்தியைப் பெறவில்லை. என்னைப் பொறுத்தவரையில் அவர் உயிருடன் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு அவர் இறந்து போனதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது 85 வயதாகும் குட்ரன், நாஜிக்கள் படையில் இருந்தவர்களின் நலனுக்காக ‘சைலன்ட் ஹெல்ப்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்புக்கு ஐரோப்பாவிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலதிபர்களிடமிருந்து நிதி வந்துகொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x