Last Updated : 14 May, 2015 10:21 AM

 

Published : 14 May 2015 10:21 AM
Last Updated : 14 May 2015 10:21 AM

பிரிட்டனில் இந்திய பெண் மேயராக தேர்வு: இப்பொறுப்பை ஏற்கும் முதல் ஆசிய பெண்

பிரிட்டனில் இந்தியாவைச் சேர்ந்த பெண் கவுன்சில் ஹர்பஜன் கவுர் தீர் (62) நகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் இப்பொறுப்பை ஏற்கும் ஆசிய கண்டத்தை சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

லண்டனின் புறநகர் பகுதியான ஏலிங் கவுன்சில் (நகராட்சி) மேயராக நேற்றுமுன்தினம் கவுர் பதவியேற்றார். விக்டோரியா ஹாலில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கவுரின் கணவர் ரஞ்சித் தீர் ஏலிங் கவுன்சிலின் மேயராக இருந்துள்ளார். கவுர் பஞ்சாப் மாநிலத்தில் 1953-ம் ஆண்டு பிறந்தார்.

1975-ம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். பிரிட்டனில் தொடக்ககால வாழ்க்கை அவர் களுக்கு இனிமையாக அமைய வில்லை. பல கஷ்டங்களுக்கு நடுவே இரு குழந்தைகளையும் வளர்த்தனர். அரசியலில் ஆர்வம் காட்டிய கவுர் தொழிலாளர் கட்சியில் இணைந்தார். 1995-ம் ஆண்டில்தான் கவுர் சமூக அறிவியலில் பட்டப்படிப்பு முடித்தார்.

பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டுப் பெண்களுக்கு ஆங்கிலம் பெரும் பிரச்சினையாக இருப்பதை உணர்ந்த கவுர், அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஆங்கிலம் கற்பித்தார். பள்ளி தாளாளராகவும் பணி யாற்றியுள்ளார். குழந்தைகள் உரிமைக்காக பல சட்ட போராட் டங்களையும் நடத்தியுள்ளார். கடந்த ஜனவரியில் பாட்டியான கவுர், தனது 62 வயதில் மேயராகி யுள்ளார்.

இது தொடர்பாக கவுர் கூறியது: இப்பதவி எனக்கு கிடைத்த கவுரவம். அதே நேரத்தில் இது சவால்மிக்க பணி. எனினும் அதனை நினைத்து மலைப்படையவில்லை.

எனது கணவர் உடனிருக்கும் போது என்னால் எவரெஸ்ட் சிகரத்தில் கூட ஏற முடியும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x