Published : 15 May 2015 10:38 AM
Last Updated : 15 May 2015 10:38 AM

ஆஸி.யை விட்டு வெளியேற்ற நாளை கடைசி: தவறினால் கொல்லப்படவுள்ளன ஜானி டெப்பின் செல்ல நாய்கள்

ஆஸ்திரேலியாவில் விதி முறையை மீறி தனது செல்ல நாயைத் தன்னுடன் வைத்திருந்த குற்றத்துக்காக, பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் 2 நாய்கள் சாவை எதிர்நோக்கியுள்ளது.

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் அடுத்த பாகத்துக்கான படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இதற்காக ஜானிடெப் மனைவி யுடன் தனி விமானம் மூலம் கலிபோர்னியாவில் இருந்து கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு வந் தார். அப்போது அவர்களுடன் தங்களுடைய செல்ல நாய்களை யும் கொண்டு வந்திருந்தனர்.

ஆஸ்திரேலிய சட்டப்படி, நாயைக் கொண்டு வருபவர்கள் அதுகுறித்து அந்நாட்டு வேளாண்மைத்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் அதிகாரிகள் அந்த நாயை குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தனியாக ஓர் இடத்தில் வைத்து பரிசோதனை நடத்தி, சில தடுப்பு மருந்துகள் போன்றவற்றைச் செலுத்துவார்கள்.

ஆனால் ஜானி டெப் தன்னுடன் நாய்களைக் கொண்டு வந்திருப் பது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. இதனை சமீபத்தில் அந்த அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை வரை ஜானி டெப் புக்குக் காலக்கெடு விதிக்கப்பட் டிருக்கிறது. அதற்குள் அவர் தன்னுடைய நாயை நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்ல வேண்டும். இல்லையெனில், அந்த நாய்களைக் கருணைக் கொலை செய்துவிடுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு வேளாண்மைத்துறை அமைச்சர் பார்னபி ஜாய்ஸ் கூறும்போது, “ஜானி டெப் பிரபல நடிகர் என்பதற்காக அவருக்கு தனி சலுகைகள் வழங்க முடியாது. அவருக்கு மட்டும் விதியைத் தளர்த்தினால் மற்றவர்களுக்கும் அந்தச் சலுகையை வழங்க வேண்டும். அது எங்களால் முடியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x