Published : 15 Apr 2015 12:10 PM
Last Updated : 15 Apr 2015 12:10 PM

தங்கத்தை கொட்டி ஆடம்பர திருமணம்

புருணே சுல்தான் ஹசன் அல் போல்கியாவின் இளைய மகனும் பட்டத்து இளவரசருமான அப்துல் மாலிக்கின் திருமணம் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஆடம் பரமாக நடைபெற்றது. மணமக்கள் இருவரும் தங்கம், வைர நகைகளில் ஜொலித்தனர்.

புதுமண தம்பதிகளை காண தலைநகர் பண்டர் செரி பெகவனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஒரு கோடியில் இருந்து பார்த்தால் மறுகோடி தெரி யாத வகையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதேபோல திருமணத்துக்காக செலவழித்த தொகையை ஒரு கோடியில் இருந்து கணக்கிட்டால் மறு கோடியை கண்டுபிடிக்க முடியாது என்கிறார்கள் அந்த நாட்டு மக்கள்.

3 மனைவி, 12 பிள்ளைகள்

உலகின் மெகா கோடீஸ்வரர் களில் புருணே சுல்தான் ஹசன் அல் போல்கியாவும் ஒருவர். அவருக்கு மூன்று மனைவிகள், 12 பிள்ளைகள். இதில் 5 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள்.

தற்போது திருமணம் நடை பெற்ற இளவரசர் அப்துல் மாலிக், சுல்தானின் தற்போதைய மனைவி ராணி சேலாஹாவுக்கு பிறந்தவர். இவர் சுல்தானின் 6-வது பிள்ளை. அப்துல் மாலிக்கிற்கும் சாப்ட்வேர் இன்ஜினீயர் தயாங்கு ரபி அதுல் என்பவருக்கும் கடந்த 12-ம் தேதி வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

தலைநகர் பண்டர் கேரி பெகவனில் உள்ள சுல்தானின் பிரம்மாண்ட அரண்மனையில் விழா நடைபெற்றது. மண மக்கள் இருவரும் இஸ்லாமிய பாரம்பரியபடி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் அணிந் திருந்த ஆடை முழுவதும் தங்கம், வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன.

மணமகள் ரபி கையில் வைத்தி ருந்த பூங்கொத்தில் மலர்க ளுக்குப் பதிலாக வைரங்கள் கோக்கப் பட்டிருந்தன. அவர் அணிந்திருந்த வைர நெக்லஸ் கண்களைப் பறித் தன. வைர காதணிகள் எட்டுதிக்கும் மின்னின. தலையில் அணிந்திருந்த தங்க கிரீடம் வைரங்களால் அலங் கரிக்கப்பட்டிருந்தது.

காலணிகளைகூட விட்டு வைக்கவில்லை. அதுவும் முழு வதும் தங்கத்தால் வடிவமைக்கப் பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக உச்சி முதல் உள்ளங்கால் வரை மணமகள் ரபி தங்கத்தில் இழைக்கப் பட்டிருந்தார். மணமகள் அளவுக்கு இல்லையென்றாலும் இளவரசர் அப்துல் மாலிக்கும் தங்க, வைர நகைகளில் ஜொலி ஜொலித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x