Last Updated : 03 Apr, 2015 11:12 AM

 

Published : 03 Apr 2015 11:12 AM
Last Updated : 03 Apr 2015 11:12 AM

கடத்தப்பட்ட கலைப் பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது அமெரிக்கா

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட ஏழு புராதன கலைப் பொருட்களை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து பழமை யான கலைப் பொருட்களைத் திருடி வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு சுபாஷ் கபூர் என்பவர் விற்று வந்தார்.

அந்தப் பொருட்கள் அனைத் தும் பல கோடி ரூபாய் மதிப் புள்ளவை. எனவே அவர் உலகின் பெரிய கடத்தல்காரர்களில் ஒருவ ராகக் கருதப்பட்டார். இதைத் தொடர்ந்து சர்வதேச இன்டர் போல் போலீஸாரின் தேடுதல் பட்டியலில் இருந்து வந்த அவர், கடந்த 2011ம் ஆண்டு ஜெர்மனி யில் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்ட‌ அவ‌ர், தற்சமயம் இதுதொடர்பான விசாரணையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் 1991ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை அமெரிக்காவில் உள்ள ஹோனோலூலூ கலை அருங் காட்சியகத்தில் சேர்க்கப்பட்ட ஏழு புராதன கலைப் பொருட்கள், இந்தியாவில் இருந்து கடத்தி வரப் பட்டவை என்பது தெரியவந் துள்ளது. மேலும் இதனைக் கடத்தி வந்தது சுபாஷ் கபூர்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள 'ஹோம்லேண்ட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன்' எனும் அமைப்பு கடந்த ஆண்டு தனக்குக் கிடைத்த ஒரு தகவலைக் கொண்டு மேற்கண்ட அருங்காட்சியகத்தில் விசாரணை நடத்தியது. அதன் முடிவாக, இத்தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஏழு கலைப் பொருட் களை அந்த அருங்காட்சியகம் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப் படைத்துள்ளது. அவற்றை அந்த அதிகாரிகள் விரைவில் இந்தியா விடம் ஒப்படைக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x