Last Updated : 03 Apr, 2015 08:45 PM

 

Published : 03 Apr 2015 08:45 PM
Last Updated : 03 Apr 2015 08:45 PM

2050-ல் உலக மக்கள் தொகையில் இந்துக்களுக்கு 3-வது இடம்: ஆய்வில் தகவல்

வரும் 2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் இந்துக்கள் மூன்றாவது இடம் பிடிப்பார்கள் என்று சர்வதேச ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு நிறுவனம் ‘உலக மதங்களின் எதிர்காலம்; மக்கள் தொகை பெருக்கம் 2010-2050’ என்ற தலைப்பில் அண்மையில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

2010 கணக்கெடுப்பின்படி உலகில் 217 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 2050-ம் ஆண்டில் 292 கோடியாக உயரும்.

முஸ்லிம்களின் எண்ணிக்கை 160 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2050-ம் ஆண்டில் மிக அதிகபட்சமாக 276 கோடியாக உயரும்.

உலகளாவிய அளவில் தற்போது 100 கோடி இந்துக்கள் உள்ளனர். 2050-ம் ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை 140 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது

இதன்படி 2050-ம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் முதலிடத்திலும் முஸ்லிம்கள் இரண்டாம் இடத்திலும் இந்துக்கள் மூன்றாம் இடத்திலும் இருப்பார்கள்.

அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடாக இந்தோனேசியா தற்போது முதலிடத்தில் உள்ளது. 2050-ம் ஆண்டில் அதிக முஸ்ஸிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x