Published : 04 Feb 2015 08:20 PM
Last Updated : 04 Feb 2015 08:20 PM

அடுத்த 20 ஆண்டுகளில் புற்று நோய் பாதிப்பு 70% அதிகரிக்கும்: உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை

அடுத்த 20 ஆண்டுகளில் புற்று நோய்க்கு ஆளாபவர்கள் எண்ணிக்கை 70% அதிகரிக்கும் என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகப் புற்று நோய் தினமான இன்று உலகச் சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுக்கையில், 1 கோடியே 40 லட்சம் புதிய புற்று நோயாளிகள் உருவாகியுள்ளதாகவும், சுமார் 80 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகியுள்ளனர் என்றும் இதில் 60% ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

2012-ஆம் ஆண்டு மனித இறப்பு விகிதத்தில் புற்று நோயே அதிக பங்களிப்பு செய்துள்ளது. இந்திய புற்றுநோய் அறிக்கை (2009-2011) படி, 2012 ஆம் ஆண்டு 10,57, 204 புற்று நோயாளிகள் என்பது 2013-இல் 10,867,83 ஆகவும் 2014-ஆம் ஆண்டு இது மேலும் அதிகரித்து 11,172,69 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்களின் படி ஆண்டொன்றுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்று நோய்க்கு உயிரிழந்து வருகின்றனர்.

"புற்று நோய் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணம் 5 காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது: அதிக எடை, உயர விகித குறியீடு, பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்வதில் குறைபாடு, உடற்பயிற்சி இன்மை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம்.” என்று உலகச் சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், மேற்கொண்ட பழக்க வழக்கங்களை மாற்றி அமைப்பதன் மூலம் 30% புற்று நோய் மரணங்களைத் தவிர்க்க முடியும் என்றே உலகச் சுகாதார அமைப்பு கூறுகிறது.

மேலும் புற்று நோயை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே கணித்து விட்டால் நோயை எளிதில் குணப்படுத்த முடியும், மேலும் இதனால் செலவுகள் கூட குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் 2012-இல் புற்று நோய் மரணங்கள்:

நுரையீரல் புற்று: 1.59 மில்லியன் மரணங்கள்

லிவர்: 745,000 மரணங்கள்

வயிறு: 723,000 மரணங்கள்

பெருங்குடல், மலக்குடலுக்குரிய புற்று: 6,94,000 மரணங்கள்

மார்பகப் புற்று: 521,000 மரணங்கள்

உணவுப்பாதை புற்று: 400 000 மரணங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x