Last Updated : 11 Jan, 2015 02:01 PM

 

Published : 11 Jan 2015 02:01 PM
Last Updated : 11 Jan 2015 02:01 PM

பாரீஸ் பத்திரிகையைத் தொடர்ந்து ஜெர்மனியில் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்

பாரீஸ் நகரில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நேற்று ஜெர்மனியில் ஒரு பத்திரிகை அலுவலகத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 7-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த இரண்டு தீவிரவாதிகள் அதன் ஆசிரியர் உட்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர்.

இந்த தீவிரவாத தாக்குதலை ஜெர்மனி நாளிதழ்கள் கடுமை யாகக் கண்டித்தன. பிரான்ஸ் கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவு தெரிவித்து சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான கார்ட்டூன்களை சில ஜெர்மனி நாளேடுகள் முதல் பக்கத்தில் வெளியிட்டன. இதேபோல் வடக்கு ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹம்பர்க் மார்கென் போஸ்ட் என்ற பத்திரிகையில் சார்லி ஹெப்டோவில் வெளியான முகம்மது நபிகள் கார்ட்டூன்கள் மறு அச்சடிப்பு செய்யப்பட்டன.

இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு அந்த பத்திரிகை அலுவலகத்தின் மீது கற்களை வீசியதுடன் பத்திரிகையின் ஆவணக் காப்பகப் பிரிவுக்கு தீவைத்தனர். இதில் பல ஆவணங்கள் தீயில் கருகி சாம்பலாகின. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. தாக்குதல் நடந்தபோது பத்திரிகை அலுவலகத்துக்குள் செய்திப்பிரிவு ஊழியர்கள் யாரும் இல்லாததால் அவர்கள் உயிர் தப்பினர்

ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல்

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் தொடர் தாக்குதல் களை நடத்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு சதித்திட்டங்களை தீட்டியுள்ளது. அதன்படி பிரான்ஸ், ஜெர்மனி பத்திரிகை அலுவலகங்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

எனவே ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உஷார் நிலையில் இருக்குமாறு அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத் துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x