Last Updated : 20 Dec, 2014 10:15 AM

 

Published : 20 Dec 2014 10:15 AM
Last Updated : 20 Dec 2014 10:15 AM

பழைய சம்பவங்களை மறந்துவிடுங்கள் தமிழர்களுக்கு ராஜபக்ச வேண்டுகோள்

பழைய சம்பவங்களை மறந்து விடுங்கள் என்று இலங்கை தமிழர்களுக்கு அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஜபக்ச மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத்தீவு பகுதியில் நடை பெற்ற பொதுக் கூட்டத்தில் பங் கேற்று ராஜபக்ச பேசியது: உள் நாட்டு போரால் ஈரான், லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் எவ்வளவு மோசமான சூழ்நிலை ஏற் பட்டுள்ளது என்பதை கவனியுங்கள்.

அதுபோன்ற சூழ்நிலை நமது நாட்டில் ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பழைய சம்பவங்களை மறந்துவிடுங்கள். நாம் அனைவரும் இணைந்து நமது நாட்டை கட்டமைப்போம். நாட்டில் பழைய வரலாறு (விடுதலைப் புலிகள்) மீண்டும் திரும்ப நாம் அனுமதிக்க கூடாது என்று ராஜபக்ச பேசினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரில் முல்லைத் தீவு பகுதியில்தான் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பலர் காணமல் போனார்கள். இது தொடர் பாக ராஜபக்ச எதுவும் பேசவில்லை. இலங்கையில் தமிழர்கள் 15 சதவீதம் பேர் உள்ளனர். எனவே அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x