Published : 23 Aug 2017 03:24 PM
Last Updated : 23 Aug 2017 03:24 PM

சவுதியில் சாலையில் நடனம் ஆடிய சிறுவன் கைது

சவுதி அரேபியாவில் சாலையின் நடுவே நடனம் ஆடிய சிறுவன் போலீஸாரால் கைது செய்ப்பட்டுள்ளது சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து சவுதி போலீஸார் கூறும்போது, "சவுதியின் கடற்கரைப் பகுதியான ஜெட்டா நகரின் முக்கிய சாலையில் சிறுவன் ஒருவன் 1990 -களில் பிரபலமான பாடலான மெக்கர்னா பாடலுக்கு நடனம் ஆடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பொது மக்களுக்கு இடையூறு செய்த குற்றத்துக்காக கைது செய்துள்ளோம்” என்றனர்.

கைது செய்யப்பட்ட சிறுவனின் பெயர் வெளியிடப்படவில்லை. அவருக்கு வயது 14 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவரின் மீது எந்த மாதிரியான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.

45 நொடிகள் ஓடக்கூடிய அந்த சிறுவனின் நடனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த சிறுவனின் கைதுக்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில், சவுதியில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில் டாபிங் எனப்படும் நடன சைகையை செய்ததற்காக அந்நாட்டின் பிரபல பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சவுதியை பொறுத்தவரை அங்கு பொதுவெளியில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுவது குறிப்பிட்டத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x