Published : 28 Jul 2017 05:30 PM
Last Updated : 28 Jul 2017 05:30 PM

மூன்று முறை பிரதமர் பதவி: ஒருமுறை கூட பூர்த்தி செய்யாத நவாஸ் ஷெரீப்

பனாமா ஊழல் வழக்கில் பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நவாஷ் ஷெரீப் பிரதமராக தனது பதவிக் காலத்தை ஒருமுறை கூட பூர்த்தி செய்தது கிடையாது.

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் நவாஷ் ஷெரீப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்ததவும், இனி நவாஸ் ஷெரீப் அரசியல் தொடர்பான பொது வாழ்வில் ஈடுபட தடை விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதுவரை மூன்று முறை பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் இதுவரை ஒரு முறை கூட தனது பதவிக் காலத்தை முழுமையாக முடிக்காதவர் என்ற பெயருக்கு சொந்தமாகியுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த நவாஸ் ஷெரீப் முதல் முறையாக நவம்பர் மாதம் 1990-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்றார். அப்போது ராணுவ ஆட்சிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த குலாம் இஷால் கானுடன் அவருக்கு ஏற்பட்ட மோதலின் காரணமாக 1993- ஆம் ஆண்டு இருவரையும் அப்போது சக்தி வாய்ந்த ராணுவ தளபதியாக இருந்த அப்தில் வகித் காக்கர் பதவி நீக்கம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு மீண்டும் பிரதமராக நவாஸ் பதவி ஏற்றார். இந்தமுறை ராணுவ தளபதியாக இருந்த முஷரப் செய்த ராணுவ புரட்சியால் மீண்டும் 1999-ம் ஆம் ஆண்டு தனது பதவியை நவாஸ் ஷெரீப் இழந்தார்.

இறுதியாக 2013 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற நவாஸ் பனாமா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் சொத்து குவித்ததற்கு ஆதாரம் உள்ளது என்று கூறி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து உத்தவிட்டடுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x