Last Updated : 24 Jun, 2016 10:08 AM

 

Published : 24 Jun 2016 10:08 AM
Last Updated : 24 Jun 2016 10:08 AM

அமெரிக்க நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் உள்ளிருப்புப் போராட்டம்

அமெரிக்காவில் ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் பலியானதைத் தொடர்ந்து, துப்பாக்கி உரிமத்துக்கு கட்டுப்பாடு விதிக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அமெரிக்க பிரதிநிதி கள் சபையில், ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தனர். அவையில் பெரும் பான்மை வகிக்கும் குடியரசுக் கட்சித் தலைமை இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. அதேசமயம் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்த தொலைக்காட்சி கேமராக் களை மூடவும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தங்களது உள்ளிருப்புப் போராட்டத்தை, ஸ்மார்ட் போன்கள் மூலம் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மூலம் எம்.பி.க்கள் ஒளிபரப்பி வருகின்றனர்.

“குடியரசுக் கட்சி வாக்கெடுப் புக்கு மறுத்துவிட்டது. ஆகவே, நாங்கள் தரையில் அமர்ந்து போராடுகிறோம்” என எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x