Published : 05 Jan 2016 09:20 AM
Last Updated : 05 Jan 2016 09:20 AM

முழு தர்பூசணியை சாப்பிட்ட சாகச சிறுவன்: இணையதளங்களில் புத்தாண்டின் முதல் ஹிட் வீடியோ

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் தோல் உட்பட முழு தர்பூசணியையும் சாப்பிடும் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கடந்த சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியை தனியார் தொலைக்காட்சி பதிவு செய்து ஒளிபரப்பி கொண்டிருந்தது. போட்டியின் இடைவேளையில் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களை பதிவு செய்த கேமராமேன், ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உறைந்து போனார். அங்கே மிட்சேல் என்ற 10 வயது சிறுவன் முழு தர்பூசணியையும், தோல் உட்பட அப்படியே சாப்பிட அதை கேமராவில் அவர் பதிவு செய்தார். இதைக் கண்ட வர்ணனையாளர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து, அந்த சிறுவனை பாராட்டினர். ‘ட்விட்டர்’ உட்பட சமூகவலைதளங்களிலும் இந்த செய்தி பரவியதால் ‘தர்பூசணி சிறுவன்’ என்ற பட்டப் பெயருடன் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

பிற இணையதளங்களிலும் இந்த வீடியோ வேகமாக பரவி வருவதால், புத்தாண்டின் முதல் இணையதள கதாநாயகனாக மிட்சேல் உருவாகி இருக்கிறான். எனினும் 2 வயது முதல் தர்பூசணியை விரும்பி சாப்பிட்டு வருவதாகவும், தான் ஒரு சராசரியான குழந்தை தான் என்றும் மிட்சேல் பணிவுடன் தெரிவித்துள்ளான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x