Published : 30 Jun 2016 10:28 AM
Last Updated : 30 Jun 2016 10:28 AM

உலகின் பெரிய பட்டை தீட்டப்படாத 1109 காரட் வைரம் லண்டனில் ஏலம்

உலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் லண்டனில் ஏலம் விடப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா நாடான போட்ஸ்வானாவில் வைர சுரங்கங்கள் உள்ளன. இங்கு கனடாவை சேர்ந்த ‘லுகாரா டைமண்ட் கார்ப்பரேஷன்’, சுரங்கம் அமைத்து வைரங்களை வெட்டி எடுக்கிறது. கரோ என்ற இடத்தில் உள்ள சுரங்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகப்பெரிய வைரத்தை இந்நிறுவனம் கண்டுபிடித்தது.

டென்னிஸ் பந்து அளவுக்கு (66.4 x 55 x 42 மி.மீ.) உள்ள பட்டை தீட்டப்படாத அந்த வைரத்துக்கு, ‘டெஸ்ஸிடி லா ரோனா’ என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு போட்ஸ்வானா மக்கள் பேசும் ஸ்வானா மொழியில், ‘எங்கள் ஒளி’ என்று பொருள். இந்த பட்டைத் தீட்டப்படாத வைரம் 1109 காரட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட வைரங்களில் இதுதான் மிகப்பெரியது என்று கூறுகின்றனர்.

இந்த வைரத்தை லண்டனில் உள்ள சோத்பை நிறுவனத்தினர் ஏலம் விட உள்ளனர். இதுகுறித்து ஏல நிறுவனத்தார் கூறும்போது, “இந்த வைரம் மிக உயர்ந்த தரத்துடனும், பளபளப்புடனும் உள்ளது. இது 250 முதல் 300 கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்று தெரிகிறது” என்றனர். இந்த வைரம் 70 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x