Published : 20 Jan 2017 10:53 AM
Last Updated : 20 Jan 2017 10:53 AM

டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் தைவான் குழு பங்கேற்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் தைவான் உயர்நிலைக் குழு பங்கேற்க உள்ளது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு தைவான் அதிபர் சாய் இங் வென்னுடன் தொலைபேசியில் பேசினார்.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தைவானுடன் அமெரிக்கா எவ்வித உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது, இது சர்வதேச மரபுமீறல் என்று சீனா குற்றம் சாட்டியது.

இந்நிலையில் அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் தைவான் குழுவும் கலந்து கொள்கிறது.

இதுகுறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியதாவது: அதிபர் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தைவான் குழுவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இடையிலான உறவு பாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x