Published : 04 Oct 2014 09:41 AM
Last Updated : 04 Oct 2014 09:41 AM

‘லிங்கா’ திரைப்படம் மூலம் சுற்றுலா மேம்படும்: ஸ்காட்லாந்து நம்பிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள லிங்கா திரைப்படத்தின் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஸ்காட்லாந்து சுற்றுலா வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் லிங்கா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இதில் ரஜினிகாந்த் தோன்றும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. ஸ்காட்லாந்தில் படமாக்கப் பட்ட முக்கியமான ஒரு பாடலில் இடம்பெற்றுள்ள காட்சியின் புகைப்படமாக அது இருக்கலாம் என கருதப்படுகிறது. இது ஸ்காட்லாந்து சுற்றுலா வாரியத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுற்றுலா வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திரைப்படக் காட்சிகளில் இடம்பெறும் புதுமையான இடங்களை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் லிங்கா திரைப்படத்தின் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளதால், அந்தத் திரைப்படம் வெளியான பிறகு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x