Published : 13 Jun 2016 07:58 AM
Last Updated : 13 Jun 2016 07:58 AM

திருமணத்துக்காக பிரிட்டனில் இருந்து இலங்கை திரும்பிய தமிழரை கைது செய்து சித்ரவதை

திருமணம் செய்து கொள்வதற்காக பிரிட்டனில் இருந்து இலங்கை திரும்பிய தமிழரை அந்நாட்டு போலீஸார் பொய் வழக்கு சுமத்தி கைது செய்து, சிறையில் அடைத்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனின் ஏலிங்கில் வசித்து வருபவர் வேலாயுதம்பிள்ளை ரேணுகருபன் (36). இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள சொந்த ஊரில் கடந்த 8-ம் தேதி இவருக்கும், தஜீபா விநாயகமூர்த்தி என்பவ ருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. இதையொட்டி 16 ஆண்டுகளுக்கு பின், பிரிட்ட னில் இருந்து தனது பிறந்த நாளான கடந்த 1-ம் தேதி வேலாயுதம்பிள்ளை யாழ்ப் பாணம் வந்து சேர்ந்தார்.

இந்நிலையில் வீட்டுக்கு வந்த வேலாயுதம் பிள்ளையை போலீஸார் அடித்து துன்புறுத்தி கைது செய்தனர். மேலும் சிறையிலும் அவரை பல்வேறு வகையில் சித்ரவதை செய் துள்ளனர்.

கடந்த சில தினங்களாக அவரது நிலை என்னவானது என தெரி யவராத காரணத்தினால், குடும் பத்தினர் மனித உரிமை ஆணை யத்திடம் முறையிட்டுள்ளனர். அதன் பிறகே மற்றொருவரை தாக்கியதாக வேலாயுதம் பிள்ளை மீது பொய் வழக்கு சுமத்தி சிறை யில் அடைத்த தகவல் வெளி யாகியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வேலாயுதம் பிள்ளை தீவிரமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x