Published : 18 Apr 2017 09:57 AM
Last Updated : 18 Apr 2017 09:57 AM

டயானா இறந்த பின் மன நலம் பாதிக்கப்பட்டேன்: மனம் திறந்தார் இளவரசர் ஹாரி

தனது தாய் டயானாவின் திடீர் மரணத்தால் மனநலம் எப்படி பாதிக்கப்பட்டது? அதில் இருந்து மீள எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது குறித்து இளவரசர் ஹாரி முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

‘த டெய்லி டெலிகிராப்’ நாளிதழுக்கு இளவரசர் ஹாரி (32) அளித்த அந்த பேட்டி நேற்று பிரசுரமானது. அதில் அவர் கூறியதாவது:

எனது தாய் டயானா 1997-ல் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த தும், அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தேன். சுமார் 20 ஆண்டுகள் வரை அந்த சோகத்தை நினைத்து மன ரீதியான பாதிப்புக்கு ஆளானேன். பலமுறை முழுமையாக மனம் உடைந்து காணப்பட்டேன். அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்கான வழி தெரியாததால், 2 ஆண்டுகள் கடுமையாக அவதிப்பட்டேன். ஒரு கட்டத்தில் எனக்கு மன நலம் சார்ந்த கவுன்சலிங் தேவைப்பட்டது. அந்த அளவுக்கு தாய் டயானாவின் மரணம் என்னை வெகுவாக பாதித்தது.

இவ்வாறு ஹாரி கூறியிருந்தார்.

பிரிட்டன் அரச பரம்பரை விதிகளுக்கு முரணாக, ஹாரி தனது மவுனத்தை கலைத்து மனம் திறந்து பேசியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x