Published : 24 Sep 2016 10:07 AM
Last Updated : 24 Sep 2016 10:07 AM

இஸ்லாமாபாத்தில் எப்16 போர் விமானம் பறந்ததா?- ட்விட்டரில் பந்தாடப்படும் பாகிஸ்தான்

காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானப் படை வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டது. தலைநகர் இஸ்லாமாபாதில் இருந்து லாகூ ருக்கு செல்லும் தேசிய நெடுஞ் சாலை நேற்றுமுன்தினம் மூடப் பட்டது. அந்தச் சாலையில் பாகிஸ் தான் போர் விமானங்கள் தரை யிறக்கப்பட்டு மேலெழும்பின.

இந்த போர் பயிற்சி தொடர்பாக பாகிஸ்தானின் ஜியோ தொலைக் காட்சி மூத்த பத்திரிகையாளர் ஹமீது மிர் நேற்று முன்தினம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இஸ்லாமாபாத் வான்பரப்பில் இரவு 10.20 மணி அளவில் எப்16 ரக போர் விமானங்கள் பறந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தான் விமானப் படையில், அமெரிக்க தயாரிப்பான எப் 16 ரகத்தை சேர்ந்த 76 போர் விமா னங்கள் உள்ளன. அந்த விமானங் கள் போர் பயிற்சியில் பயன்படுத் தப்பட்டுள்ளன. இதையே ஹமீது மிர் தனது ட்விட்டர் பதிவில் சுட்டிக் காட்டினார்.

அடுத்தடுத்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில், போர் விமானங்கள் பறப்பதால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். தெற் காசியாவுக்கு போர் உகந்தது அல்ல. பொது மக்கள் ஒன்றுதிரண்டு போர் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

இணையத்தில் நையாண்டி

இந்தப் பின்னணியில் இந்திய இணையவாசிகள் ட்விட்டரில் நையாண்டி உத்திகளைப் பின்பற்றி கேலி சித்திரங்களுடன் பாகிஸ்தானை பந்தாடி வருகின்ற னர். அதில் சில பதிவுகள் வருமாறு:

எப்16 என்று எழுதப்பட்ட கழுதையின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில் ‘இஸ்லாமாபாத் சாலை களில் எப்16 நடந்து சென்றிருக் கிறது’ என்று நையாண்டி செய்யப் பட்டுள்ளது.

‘தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீபும் முன்னாள் அதிபர் ஜர்தாரி யும் இந்தியா மீது தாக்குதல் நடத்த எப்16-ல் பறந்திருக்கலாம்’ என்று நிதின் என்பவர் கேலி சித்திரத்துடன் கிண்டல் செய்துள்ளார்.

‘பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீபுக்காக எப்16-ல் பிட்ஸா எடுத்துச் செல்லப்பட்டுள்ளது’ என்று ஹமீது என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

‘ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி பாகிஸ்தா னில் பதுங்கியிருக்கக்கூடும். அவரை தேட அமெரிக்க விமானப் படையின் எப்16 போர் விமானம் இஸ்லாமாபாதில் பறந்திருக்கும். எனவே அந்த விமானம் தங்கள் நாட்டு விமானம் தானா என்பதை பாகிஸ்தான் உடனடியாக உறுதி செய்து கொள்வது நல்லது’ என்று ராகுல் ரோஷன் என்பவர் பதவிட்டுள்ளார்.

நவாஸும் ஜர்தாரியும் எப்16-ல் பறப்பதாக வெளியிடப்பட்ட படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x