Last Updated : 11 May, 2017 11:40 AM

 

Published : 11 May 2017 11:40 AM
Last Updated : 11 May 2017 11:40 AM

சீனாவில் மிதமான நில நடுக்கம்: 8 பேர் பலி; காயம் 20

சீனாவின் மேற்கு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தில் 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம், "சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 5.58 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆக பதிவாகியது. மேலும் இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சீன அதிகாரிகள் தரப்பில், "சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். 150க்கும் மேற்பட்ட வீடுகள் நிலநடுக்கம் காரணமாக சரிந்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது" என்றனர்.

சீனாவின் மேற்கு பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு ஆகும். சீனாவில் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 90,000 பேர் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x