Last Updated : 12 Mar, 2018 04:55 PM

 

Published : 12 Mar 2018 04:55 PM
Last Updated : 12 Mar 2018 04:55 PM

குழந்தைகளின் சிறுபிராய பாலியல், துயர, அதிர்ச்சி அனுபவத்தினால் பிற்காலத்தில் மனச்சிதைவு: ஆய்வில் எச்சரிக்கை

குழந்தைகளின் சிறுபிராய பாலியல்  மற்றும் துயர் தரும் அதிர்ச்சி அனுபவம் பிற்காலத்தில் அவர்களை மனச்சிதைவு (schizophrenia) நோய்க்கு ஆளாக்கலாம் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரிகனில் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு இளையோர் மனநல ஆரோக்கிய மைய ஆராய்ச்சியாளர்கள், மெல்போர்ன் பல்கலைக் கழகம், மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழந்தைப் பருவ துன்பம் தரும் நிகழ்வுகள், அதிர்ச்சி ஏற்படுத்தும் உணர்வு நிகழ்வுகள் பிற்கால மனச்சிதைவு நோய்க்கு காரணம் என்று தெரிவிக்கின்றனர்.

இது மருத்துவ ரீதியாக ஏதோ புதிதாகக் கூறியது போல் தெரிந்தாலும் சிக்மண்ட் பிராய்ட் என்ற ஜெர்மானிய உளப்பகுப்பாய்வு தத்துவ மேதை 2 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இதனை நிரூபித்ததோடு, தன் கோட்பாடுகளுக்கு சுயதேற்றமான சந்தர்ப்பங்களையும் எண்பித்துள்ளார்.

அதாவது அவர் அன்று கூறிய பாலியல், உடலியல், உணர்வியல் ரீதியான துஷ்பிரயோக பால்ய, பாலிய அனுபவங்கள் பிற்காலத்தில் மனச்சிதைவு நோய்க்கு பிரதான காரணமாகிறது என்பதை இன்று இந்த ஆய்வாளர்கள் உடற்கூறு ரீதியாக நிரூபிக்கப் பிரயத்தனப்பட்டுள்ளனர்.

அதாவது மனசிதைவு நோய்க்கு ஆளானவர்களுக்கு ஏற்படும் மனப்பிரமைகள், மானசீகக் காட்சிகள் குழந்தைப் பருவ துன்பத்தை, அதிர்ச்சியை, உணர்வுகளுடன் தொடர்புடையதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் சாரா பெண்டல் தெரிவித்தார்.

குழந்தைப்பருவ மீறல் அனுபவங்களுடன் தொடர்புடைய 29 ஆய்வுகள், குழந்தைப் பருவ பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல் பெரும்பாலான பிற்கால மனப்பிரமைகளுக்குக் காரணமாகின்றன என்பதைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

18-25 வயதிலேயே மனச்சிதைவு நோய்க்கான அறிகுறிகள் 100-ல் ஒருவருக்கு ஏற்படத் தொடங்கி விடுகிறது. நோய் அறிகுறிகளாவன: நடைமுறை எதார்த்தத்திலிருந்து துண்டித்துக் கொள்ளுதல், மனப்பிரமைகள், மாயக்க்காட்சிகள், ஒழுங்கற்ற சிந்தித்தல், எந்த ஒரு உணர்வும் உத்வேகமுமின்றி இருத்தல்.

அதாவது அவர்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் இந்த நிலைக்கு எது காரணம் என்று எங்கள் ஆராய்ச்சி முடிவுகளை அவர்களுக்கு அளித்து அதன் மூலம் அவர்களே முடிவுகளை எடுக்க பழக்குகிறோம் என்கிறார் டாக்டர் பெண்டெல். அதாவது இத்தகைய சிகிச்சை முறை பாதிக்கப்பட்டவர்களே தங்களது மன அமைதியின்மைக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு அவர்களே சிந்தித்து புதிதாக தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ள இந்த ஆய்வு உதவுகிறது என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த ஆய்வின் விவரங்கள் ஸ்கீஸோப்ரீனியா புல்லட்டின் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x