Last Updated : 03 Mar, 2018 11:39 AM

 

Published : 03 Mar 2018 11:39 AM
Last Updated : 03 Mar 2018 11:39 AM

ஆப்பிரிக்கா நாடான புர்கினோ பாசோவில் தீவிரவாதத் தாக்குதல்: 80 பேர் காயம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் பிரான்ஸ் தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அரசுத் தரப்பில், ''புர்கினோ பேசோவில் வெள்ளிக்கிழமை தேசிய ராணுவ அலுவலகம் மற்றும் பிரான்ஸ் தூதரகத்தில் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜாங் ஈவ் லெ ட்ரியான் கூறும்போது, ''இது ஒரு பயங்கரவாதச் செயல் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது உடனடியாகத் தெளிவாகவில்லை. இந்தத் தாக்குதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யாரும் இறக்கவில்லை என்று லீ ட்ரியான் தெரிவித்துள்ளார்'' என்றார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலுக்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 கோடி அளவுக்கு மக்கள் தொகை கொண்ட புர்கினா பேசோ பிரான்ஸ் நாட்டின் காலனியாதிக்கத்தில் இருந்து 1960-ம் ஆண்டு விடுதலை பெற்றது.

பிரான்ஸுடன் நல்ல நட்பில் இருந்து வரும் நிலையில் சமீபகாலமாக இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x