Published : 30 Apr 2019 04:30 PM
Last Updated : 30 Apr 2019 04:30 PM

அரியணையைத் துறந்தார் ஜப்பான் அரசர்

ஜப்பான் அரசர் அகிஹிட்டோ தனது அரியணையை துறப்பதாக அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சிகளில் அகிஹிட்டோ உரையாற்றினார்.

85 வயதான அகிஹிட்டோ அரசர் பதவியை துறப்பதாக செய்வாய்க்கிழமை நள்ளிரவு இதனை அறிவித்தார்.  வயது மூப்புக் காரணமாக அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு அரியணையிலிருந்து விலவதாக அகிஹிட்டோ தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அகிஹிட்டோ பேசும்போது, “  என்னை அவர்களது அடையாளமாக ஏற்றுக் கொண்ட மக்களுக்கு  நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாம்  ஜப்பானின் வெளிச்சமிக்க எதிர்காலத்தை உருவாக்க மிகுந்த முயற்சிகளை மேற்கொள்வோம்.

அதில்  நம்பிக்கைகளும், அமைதியும் நிறைந்திருக்கும். ஜப்பான் மக்கள் மற்றும் உலகில் உள்ள பிற நாட்டு மக்களும் அமைதியாக மற்றும் மகிழ்ச்சியாக இருக்க நான் பிரார்த்தித்து கொள்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்வில் ஜப்பான் பிரதமர் ஷின்சே உள்ளிட்ட ஜப்பானின் முக்கிய தலைவர்கள்  கலந்துக் கொண்டனர்.

 200 ஆண்டுகளில் ஜப்பானில் அரியணை துறக்கும் முதல் அரசர் அகிஹிட்டோ ஆவார்.

அகிஹிட்டோவுக்கு அடுத்து அவரது மகனும், இளவரசருமான நருஹிட்டோ வரும் புதன்கிழமை பதவி ஏற்க இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x