Last Updated : 28 Apr, 2019 04:53 PM

 

Published : 28 Apr 2019 04:53 PM
Last Updated : 28 Apr 2019 04:53 PM

தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட இலங்கை தேவாலயங்கள்: தொலைக்காட்சி மூலம் பேராயர் ஞாயிறு பிரார்த்தனை

கடந்த வாரம் இதேநாளில் ஈஸ்டர் பண்டிகையின்போது 250க்கும் அதிகமானோர் தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு பலியான சம்பவங்கள் நடந்ததையடுத்து இன்று தேவாலயங்கள் மூடப்பட்டன.

கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் இன்று ஞாயிறு பிரார்த்தனையை தொலைக்காட்சி வழியே நடத்தினார். இதில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரும் கலந்துகொண்டதாக பிபிசி தெரிவிக்கிறது.

அவரது வீட்டிலிருந்து நடத்தப்பட்ட இப் பிரார்த்தனை ஒரு தேவாலயத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது.

இதில் பேராயர் மால்கம் ரஞ்சித் பேசுகையில், இது மனிதகுலத்திற்கு அவமானம். எனினும் நாங்கள் இன்றைய பிரார்த்தனையின்போது கடந்த ஞாயிறு அன்று நடந்த துயரத்திற்கு அஞ்சலி செலுத்துகிறோம். நாம் சோகத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

இந்த நாட்டில் சமாதானமும் ஒற்றுமையும்  தழைக்கவும், பிரிவினை இல்லாமல் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழவும் இறைவனிடம் நாம் பிரார்த்தனை செய்கிறோம்.

இவ்வாறு பேராயர் பிரார்த்தனை அஞ்சலி செலுத்தினார்.

இலங்கையின் தேவாலயங்கள் காலியாக இருந்த போதிலும், மிகக் கொடூரமான குண்டுவெடிப்பு நடந்த இடங்களில் ஒன்றான கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு வெளியே - மக்கள் ஒரு பொது பிரார்த்தனைக்காக கூடினார்கள்.

இப்பிரார்ததனையின்போது மத நல்லிணக்கத்தை பறைசாற்றும்விதமாக புத்த பிக்குகளும் உடன் இருந்தனர்.

தேவாலயத்தின் ஆலயமணிகள் இன்று காலை 8.45க்கு தேவாலயத்தின் ஆலய மணிகள் அடிக்கப்பட்டன. இது சென்ற வாரம் குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதே சரியான நேரமாகும். சேதமடைந்த தேவாலய மணிகள் அதேநேரம் இன்றும்கூட சிக்கி நின்றன.

கொழும்பு நகரின் புனித அந்தோணியார் தேவாலயம் தவிர, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மற்றும் கொழும்புவின் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றிலும் தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடந்தன.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு கடந்த ஞாயிறு ஈஸ்டர் பண்டிகையில் நடைபெற்ற மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவத்தில் 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 259 பேர் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x