Last Updated : 06 Mar, 2019 02:18 PM

 

Published : 06 Mar 2019 02:18 PM
Last Updated : 06 Mar 2019 02:18 PM

பொய் செய்திகளை தடுக்க 3 வருடங்கள் எடுத்துக் கொண்ட பேஸ்புக்

மால்டோவா - ஐரோப்பவில் இருக்கும் நாடுகளிலேயே மிகவும் ஏழ்மையான, ஊழலான நாடாக கருத்தப்படுகிறது. பொய்யான செய்திகளும் தகவல்களும் நிறைந்துள்ள பகுதிகள் என பேஸ்புக் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த நாடு இடம்பெறவில்லை.

மால்டோவாவில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இதற்கான காரணத்தை விளக்குகின்றனர். பொய் செய்திகள் பற்றி பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இவர்களுக்கு 3 வருடங்கள் ஆகியுள்ளது. அதன் பிறகே பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்காக, பிரவுசரில் ட்ரால்லெஸ் என்ற மென்பொருளை இன்ஸ்டால் செய்து, அதன் மூலமாக போலியான கணக்குகளைப் பற்றிய ஒரு தரவை தயார் செய்துள்ளனர். பின் பேஸ்புக்கின் புகார் தெரிவிப்பதற்கான வசதியை பயன்படுத்தி அவர்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

2019 ஜனவரியில், எதேச்சையாக பேஸ்புக் ஊழியர் ஒருவரை இவர்கள் சந்தித்தனர். பிறகே அவதூறு பரப்பும் 168 போலி கணக்குகள், 26 பக்கங்கள் மற்றும் 8 இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் அடுத்த மாதம் நீக்கியுள்ளது. 

சின்ன சந்தையிலிருந்து ஒரு புகாரை பேஸ்புக் கவனத்துக்கு எடுத்துச் செல்வது எவ்வளவு கடினமானது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. பொய் செய்திகளையும், தகவல்களையும் பற்றிய புகாருக்கே இந்த நிலை. இது மால்டோவாவுக்கான பிரச்சினை மட்டுமல்ல, பேஸ்புக்குடன் அதிகாரப்பூர்வமாக கூட்டு வைக்காத எந்த நாட்டுக்கும் அவர்கள் கவனத்தைப் பெற்று பிரச்சினையை தீர்ப்பது கடினமான வேலை தான் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x