Published : 14 Feb 2019 12:39 PM
Last Updated : 14 Feb 2019 12:39 PM

ஐஎஸ் இயக்கத்திலிருந்த தப்பி வந்த இளம்பெண்: சொந்த நாடு செல்ல விருப்பம்

ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீண்டும் தனது சொந்த நாடான இங்கிலாந்துக்கு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அப்பெண் அளித்த பேட்டியில், 19 வயதான ஷமிமா என்ற இளம்பெண் ஒருவர், ”கடந்த 2015 ஆம் ஆண்டும் இரு தோழிகளுடன் துருக்கிக்கு சென்றேன். பின்னர் அங்கிருந்து சிரியா எல்லையை கடந்து ரக்கா நகரத்துக்கு சென்றேன். 

அங்கு ஆங்கில பேசக் கூடிய ஐஎஸ் தீவிரவாதி ஒருவரை திருமணம் செய்தேன். பின் 10 நாள் கழித்து இரண்டாவது ஒரு நபரை திருமணம் செய்தேன். அவர்தான் என்னை இஸ்லாமுக்கு மதம் மாற்றினார்.

நாங்கள் இருவரும் ஒன்றாகதான் அங்கிருந்து தப்பித்தோம். எனது கணவர் சரணடைந்து விட்டார். நன தற்போது அகதிகளுடன் தங்கி இருக்கிறேன்” என்றார்.

ஐஎஸ் அமைப்பில் இருந்தப் போது ஒரு சாதாரண வாழ்க்கைதான் வாழ்தேன் ஆனால் எனது 15 வயதில் சென்ற  ஷமிமாக நான் இல்லை. நான் தற்போது எனது குழந்தைகாக எனது சொந்த நாட்டுக்கு (இங்கிலாந்து) திரும்ப இருக்கிறேன்.

நான் மீண்டும் இங்கு வந்ததற்காக நான் எந்த வருத்தமும் கொள்ளவில்லை. ஐஎஸ் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இவர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அவர்கள் ஊழல் நிறைந்து காணப்படுகின்றன. அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x