Published : 27 Dec 2018 04:12 PM
Last Updated : 27 Dec 2018 04:12 PM

வெனிசுலாவில் மிதமான  நிலநடுக்கம்

வெனிசுலாவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிலநடுக்கம் ஆய்வு மையம் தரப்பில், ''வெனிசுலாவில்  உள்ள சான் டியாகோ நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள கேரபோவா பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மதியம் சுமார் 2 மணி 29 நிமிடத்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் ஆழம் 10 கிலோ மீட்டர் ஆகும். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 6 நொடிகளுக்கு இந்த நிலநடுக்கம் நீடித்ததாகவும் இதனால் வீடுகள் குலுங்கியதாகவும் இந்த நிலநடுக்கத்தை நேரில் உணர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளிவரவில்லை ஏன்று ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x