Last Updated : 03 Oct, 2018 09:32 PM

 

Published : 03 Oct 2018 09:32 PM
Last Updated : 03 Oct 2018 09:32 PM

இந்தோனேசியாவின் சுலாவேஸி 7.5 பூகம்பத்தினால் எரிமலையும் வெடிப்பு: பீதியில் மக்கள்

இந்தோனேசியாவின் சுலாவேஸியில் அன்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் காரணமாக வடக்கு சுலாவேஸியில் உள்ள எரிமலையும் வெடித்துள்ளதாக அரசு எரிமலை ஆய்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சொபுடான் என்ற இந்த எரிமலை 6,000 மீட்டர்களுக்கு வானில் சாம்பல் புகையைக் கக்கியுள்ளது. இன்னும் அங்கிருப்பவர்கள் வெளியேற்றப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் அடுத்தடுத்த இயற்கை அச்சுறுத்தல்களால் கடும் பீதியடைந்துள்ளனர்.

“சுலாவேஸி பூகம்பம் இந்த எரிமலை வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனால் ஜூலை முதலே எரிமலை நடவடிக்கைகளை அதிகரித்து வந்ததையும் பார்த்து வந்தோம். இது திங்களன்று மேலும் அதிகரித்தது. இருப்பினும் நேரடியான தொடர்பிருக்கிறது என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. ஏனெனில் இந்த எரிமலை பூகம்ப மையத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளது” என்று காஸ்பனி என்ற எரிமலை ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார்.

விமானங்கள் இப்பகுதியில் பறக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பட்டாம்பூச்சி தன் இறகுகளை அசைத்தால் அது இயற்கையில் கண்ணுக்குத் தெரியா மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது கேயாஸ் என்ற அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையாகும். எனவே இந்த பூகம்பம் எரிமலை வெடிப்புக்கும் காரணமாக இருக்கலாம் என்ற பார்வையும் வலுத்து வருகிறது.

பூகம்ப அதிர்ச்சி அலைகள், எரிமலையடியில் இருக்கும் மேக்மா பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தி வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர். 2004 இந்தோனேசிய பூகம்பம் அதனையடுத்த மிகப்பெரிய தெற்காசிய சுனாமி பேரழிவுக்குப் பிறகு 2005-ல் தலாங் எரிமலை வெடித்தது இதற்கு உதாரணமாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x