Last Updated : 23 Jun, 2018 12:47 PM

 

Published : 23 Jun 2018 12:47 PM
Last Updated : 23 Jun 2018 12:47 PM

தென்கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜோங் பில் 92 வயதில் மரணம்

முன்னாள் தென்கொரிய பிரதமர் கிம் ஜோங் பில் (92 வயது)  வயது முதிர்ச்சியின் காரணமாக காலமானார்.

இதுகுறித்து யோனாப் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "கிம் கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்ச்சி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை 8. 15 மணியளவில் அவருக்கு உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சோன்சுன்யாங் மருத்துவமனைக்கு அவர் கொண்டுச் செல்லப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி கிம் ஜோங் பில் காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

1926 ஆம் ஆண்டு பிறந்த கிம் ஜோங் பில், கொரிய ராணுவத்தில் முக்கிய பதவியில் இருந்தார். 

தென்கொரியவின்  முக்கிய அரசியல் தலைவராக கருதப்பட்ட கிம் ஜோங் பில், 1071 - 1075, 1998 - 2000 என இரண்டு முறை தென்கொரியாவின் பிரதமாராக இருந்தார். ஐந்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் க பில் இருந்திருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு கே. ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்தப்போது பில் இந்தியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கிம் ஜோங் பில்லின் இந்த இழப்பு தென்கொரியா அரசியல் தலைவர்களிடையே பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x