Published : 20 Jun 2018 06:06 PM
Last Updated : 20 Jun 2018 06:06 PM

கென்யாவில் இந்தியர்கள் யோகா செய்ததாக போட்டோஷாப் படங்களை ட்வீட் செய்த இந்திய தூதரகம்; பிற்பாடு மன்னிப்புக் கேட்டது

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கென்யாவில் உள்ள இந்தியர்கள் கென்யாவில் உள்ள புனிதமான இடத்தில் யோகா செய்தனர் என்று கென்யாவில் உள்ள இந்திய தூதரகம் புகைப்படங்களுடன் ட்வீட் பதிவிட்டிருந்தது.

மவுண்ட் கென்யா அடிவாரத்தில் இந்தியர்கள் யோகா செய்ததாகக் கென்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட ட்வீட் போட்டோஷாப் செய்யப்பட்ட இமேஜ்கள் என்பது பிற்பாடு தெரியவர இந்திய தூதரகம் அந்த ட்வீட் பதிவை பிற்பாடு நீக்கியதோடு மன்னிப்பு வெளியிட்டது.

இந்த ட்வீட்டை கென்யாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட பிறகு ஏகப்பட்ட டிவிட்டர் பயனாளிகள் அவைப் போலிப்படங்கள் என்று ட்வீட் செய்ய அது நீக்கப்பட்டது.

இந்தியர்கள் யோகா செய்ததாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அனைத்திலும் மலைக்குப் பின்னால் உள்ள வெண்மேகங்கள் 3 புகைபடங்களில் ஒரே இடத்தில் இருந்தது. எனவே இது மோசமாக போட்டோஷாப் செய்யப்பட்ட இமேஜ்கள் என்பது தெரியவந்தது. கூகுள் இமேஜ் சர்ச் செய்தால் ஒரிஜினல் இமேஜ் எது, அதிலிருந்து போட்டோஷாப் செய்யப்பட்ட இமேஜ் எது என்று கண்டுபிடித்து விட முடியும்.

இது போட்டோஷாப் இமேஜ் என்பதை அறிந்த இந்திய தூதரகம் ட்வீட்டை நீக்கியதோடு, சரிபார்க்காமல் வெளியிட்டதற்காக மன்னிப்புக் கேட்டது, இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் போட்டோஷாப் இமேஜை அனுப்பியதாக இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

போலி செய்திகள் போலிப்புகைப்படங்களுக்கான இந்தக் கால ஊடகங்களில் இந்தியத் தூதரகம் மன்னிப்புடன் அது போலிப்புகைப்படம் என்பதை ஒப்புக் கொண்டு ட்விட்டரில் பதிவிட்டது ட்விட்டர்வாசிகளின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x