Last Updated : 09 Jun, 2018 12:58 PM

 

Published : 09 Jun 2018 12:58 PM
Last Updated : 09 Jun 2018 12:58 PM

வியட்நாம் போரில் பங்கேற்க மறுத்த முகம்மது அலிக்கு மன்னிப்பு: டிரம்ப் அறிவிப்பு

வியட்நாம் போரில் ராணுவ சேவையை மறுத்ததன் மூலம் 1967ஆம் ஆண்டில் குற்றவாளியாகக் கருதப்பட்ட குத்துச்சண்டை வீரர் முகம்மது அலிக்கு அவரது மரணத்துக்குப் பிறகு தற்போது மன்னிப்பு வழங்க பரிசீலனை செய்துவருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

கனடாவில் நடைபெற உள்ள கியூபெக் ஜி7 மாநாட்டில் பங்கேற்க, வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், முகம்மது அலி உள்ளிட்ட இன்னும் சிலரையும் மன்னிப்பு வழங்குவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாகக் கூறினார்.

மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற பரிசீலனையில் உள்ள மூவாயிரம் பேர்களில் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரும் ஒருவர். அந்த மூவாயிரம் பேர்களில் அநேகர் உண்மையில் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அலியின் வழக்கறிஞர்

பின்னர், நேற்று மாலை இதுகுறித்து முகம்மது அலியின் வழக்கறிஞர், ரான் ட்வீல், சிஎன்என் தொலைக்காட்சியில் பேசுகையில், இப்பிரச்சனை சம்பந்தமாக முகம்மது அலியின் குடும்பத்தினர் யாரும் டிரம்ப் நிர்வாகத்தோடு தொடர்பில் இல்லை. எனவே கடந்த வாரங்கள் அல்லது நாட்களில் யாரும் வந்து இதுபற்றி அரசிடம் பேச வில்லை. அது ஒன்றும் இல்லை.

இப்பிரச்சனையில், பலரும் மனமுடைந்த நிலையில் இருப்பதாக சொல்லப்படுவதுபோன்று, டிரம்ப்பின் இந்த முடிவு இயல்பாகவே அமைந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

ரான் ட்வீல் முன்னதாக வெளியிட்ட அறிக்கையொன்றில், ட்ரம்பின் உணர்வை பாராட்டியிருந்தாலும் மன்னிப்பு தேவையற்றது என்று கூறியிருந்தார்.

வியட்நாம் போர்

வியட்நாம் போர் வரைவை நிராகரித்ததன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை சட்டங்களை மீறியதற்காக முகம்மது அலி, ஜூன் 1967 இல் ஃபெடரல் நீதிமன்றத்தால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இதனால் முகம்மது அலி, உலக குத்துச்சண்டை சங்கம் அளித்த தனது ஹெவிவெயிட் பட்டத்தையும், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான பாஸ்போர்ட் மற்றும் அனைத்து குத்துச்சண்டை உரிமங்களையும் பறிகொடுக்க நேரிட்டது.

அதுமட்டுமின்றி அவர் 10,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டார். உச்சபட்சமாக ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் அவரது மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் வெற்றிபெறும்வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் எந்தக் குத்துச்சண்டை போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை.

போர் எதிர்ப்பு உணர்வு வளர்ந்த பிறகு, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 1970லிருந்து அலி மீண்டும் தனது குத்துச்சண்டை தொழிலில் ஈடுபட முடிந்தது. அவரது இறுதிகாலத்தில் மூளைநரம்பு நோய் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடினார். 2016ல் அவர் உயிர் பிரிந்தது.

இந்நிலையில் டிரம்பின் அறிவிப்பு ஏதோ ஒரு வகையில் ஆறுதல் தரக்கூடியதாகவே உள்ளதாக கூறப்படுகிறது. தனது அலுவலகத்தில் இருந்து டிரம்ப் 5 பேருக்கு மன்னிப்புக் கடிதங்களையும் ஒருவருக்கு தண்டனை காலத்தைக் குறைத்தும் உத்தரவையும் வழங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x