Published : 03 Apr 2018 07:36 AM
Last Updated : 03 Apr 2018 07:36 AM

வின்னி மண்டேலா காலமானார்

கடந்த 1936 செப்டம்பர் 26-ம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஈஸ்டர்ன் கேப் நகரில் வின்னி பிறந்தார். சமூக சேவகரான அவர் கடந்த 1958-ல் நெல்சன் மண்டலேவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். தென்னாப்பிரிக்கா சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் அதிபராக 1994 மே 10-ம் தேதி நெல்சன் மண்டேலா பொறுப்பேற்றார். 1996-ம் இருவரும் விவகாரத்து பெற்றனர். 2013 டிசம்பர் 5-ம் தேதி நெல்சன் மண்டேலா காலமானார். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 81-வது வயதில் வின்னி நேற்று காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x