Published : 27 Feb 2018 08:13 AM
Last Updated : 27 Feb 2018 08:13 AM

தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுக்காததால் கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் சேர்க்க சர்வதேச அமைப்பு முடிவு: சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு முடிவு

தீவிரவாதிகளுக்கு நிதி செல்லும் ஆதாரங்களைத் தடுக்காததால், அந்த நாட்டை கறுப்புப் பட்டியலில் மீண்டும் சேர்க்க சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (எப்ஏடிஎப்) முடிவெடுத்துள்ளது. எனினும், 3 மாதங்கள் பாகிஸ்தானுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ள தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இரட்டை வேடம் போடுகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அத்துடன் பாகிஸ்தானுக்கான நிதியுதவிகளையும் நிறுத்திவிட்டார். மேலும், பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சர்வதேச எப்ஏடிஎப் அமைப்பை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

சர்வதேச அளவில் சட்டவிரோதமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அமைப்புதான் எப்ஏடிஎப். சர்வதேச நாட்டு அரசுகளை உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் மாநாடு கடந்த வாரம் பாரிஸில் நடந்தது. அப்போதே, பாகிஸ்தானைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.

எனினும், பாகிஸ்தானுக்கு கடைசி வாய்ப்பாக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் திருப்தி அளிக்கும் வகையில் தீவிரவாதி கள் மீதும், அவர்களுடைய நிதி ஆதாரங்களுக்கான வழிகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எப்ஏடிஎப் அமைப்பு எச்சரித்துள்ளது. வரும் ஜூன் மாதம் எப்ஏடிஎப் அடுத்தக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் சேர்க்க முடிவெடுத்துள்ளதாக கூறுகின் றனர்.

பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்த்து விட்டால், அந்நாட்டின் பொருளாதாரம், சர்வ தேச முதலீடுகள் கடுமையாக பாதிக்கும். அத்துடன் சர்வதேச அளவில் வங்கிகளில் பண பரிவர்த்தனையும் முடங்கி விடும் என்று வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். அதில் பலர் உயிரிழந்து வருகின்றனர். அத்துடன் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா ஹபீஸ் சயீது, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாதிகள் பகிரங்கமாகவே தங்கள் அமைப்புக்கு நிதி திரட்டி வருகின்றனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. தீவிரவாதிகளின் நிதி ஆதாரங்களைத் தடுக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகி றார்.

குறிப்பாக மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத் விடுவிக்கப்பட்ட பிறகு அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஹபீஸ் சயீதின் அறக்கட்டளைகளை அவசர அவசரமாக பாகிஸ்தான் தடை செய்தது. அதனால் தற்போதைக்கு கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் முடிவை எப்ஏடிஎப் ஒத்திவைத்துள்ளது. எனினும், பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கை போதாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஏற்கெனவே கடந்த 2015-ம் ஆண்டு வரை எப்ஏடிஎப்.பின் கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் இருந்தது. தற்போது மீண்டும் அந்தப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்க்க அந்த அமைப்பு முடிவெடுத்துள்ளது. இதனால் அந்நாட்டுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x