Published : 31 Jan 2018 10:03 AM
Last Updated : 31 Jan 2018 10:03 AM

பனாமா ஊழலில் கூடுதல் வழக்கு: நவாஸ் ஷெரீப் ஆட்சேபத்தை நீதிமன்றம் நிராகரித்தது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லண்டனில் உள்ள சொத்துகள் தொடர்பாக கூடுதல் வழக்குப் பதிவு செய்ததற்கு நவாஸ் ஷெரீப் தெரிவித்த ஆட்சேபத்தை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி வகித்தபோது லண்டனில் அவரது குடும்பத்தினர் பெயரில் சொத்துகள் வாங்கியதற்கான ஆவணங்களை பனாமா நாட்டை சேர்ந்த ஒரு சட்ட நிறுவனம் வெளியிட்டது. இதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், நவாஸ் ஷெரீப், அவரது 2 மகன்களான ஹுசைன், ஹாசன், மகள் மர்யம், மருமகன் சஃப்தார் ஆகியோர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் நவாஸ் ஷெரீப் பதவி விலக நேரிட்டது.

இந்நிலையில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த 22-ம் தேதி கூடுதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு நவாஸ் ஷெரீப் வழக்கறிஞர் நேற்று விசாரணை நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்த வழக்கில் புதிதாக ஏதுமில்லை என்றார் அவர். இதற்கு ஊழல் தடுப்பு அமைப்பின் வாதங்களை கேட்ட நீதிமன்றம், நவாஸ் ஷெரீப் ஆட்சேபத்தை நிராகரித்தது. அவென்ஃபீல்ட் ஃப்ளாட்ஸ் வழக்கில் ஒரு பகுதி ஆவணங்களின் அடிப்படையில் கூடுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x