Last Updated : 29 Dec, 2017 04:39 PM

 

Published : 29 Dec 2017 04:39 PM
Last Updated : 29 Dec 2017 04:39 PM

சர்வதேச விண்வெளி நிலைய விஞ்ஞானிகளுக்கு 16 முறை புத்தாண்டு அனுபவம்: நாசா தகவல்

90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வருவதால் புத்தாண்டு தினத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 6 வானியல் விஞ்ஞானிகள் 16 முறை அனுபவிப்பர் என்று நாசா அதிசயத் தகவல் வெளியிட்டுள்ளது.

அதாவது பூமிக்கு மேலே 402 கிமீ உயரத்தில் 16 சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனங்கள் என்று அமெரிக்க விண்வெளி மையமான நாசா தனது வலைப்பதிவு ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 3 அமெரிக்க வானியலாளர்கள் உட்பட 2 ரஷ்ய மற்றும் ஒரு ஜப்பானிய விஞ்ஞானிகளும் உள்ளனர்.

புத்தாண்டையொட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் 6 வானியலாளர்களின் உடல் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்கள் கணிக்கின்றனர். அவர்களது சுவாசம் உள்ளிட்டவைகளை அவர்கள் சோதிக்கின்றனர். காரணம் இவர்கள் ஸ்பேஸ் வாக் உள்ளிட்ட கடுமையான உடல் பயிற்சிகளுக்கு தயாராக இருக்கின்றனரா என்பதைப் பரிசோதிக்கவே.

விஞ்ஞானிகள் தாவரங்கள் எவ்வாறு நுண் புவியீர்ப்பு விசைக்கு வினையாற்றுகிறது என்பதையும் மூலக்கூறு மற்றும் மரபணு மாற்றங்களையும் கவனித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x