Published : 13 Dec 2017 10:13 AM
Last Updated : 13 Dec 2017 10:13 AM

பூமிக்கு அருகில் வந்த வேற்றுகிரக விண்கலம்?

கடந்த அக்டோபரில் பூமிக்கு மிக அருகில் நீள் வடிவ மர்ம பொருள் மணிக்கு 1,96,000 மைல் வேகத்தில் கடந்து சென்றுள்ளது. அந்த மர்ம பொருள் வேற்றுகிரக விண்கலமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் யூரி மில்னர் வேற்றுகிரக ஆராய்ச்சிக்காக பெரும் தொகையை செலவிட்டு வருகிறார். அவர் அளிக்கும் நிதியுதவியில் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வேற்றுகிரகவாசிகள் குறித்து சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கடந்த அக்டோபரில் பூமிக்கு மிக அருகில் ஊசி வடிவிலான நீள்வட்ட மர்ம பொருள் மணிக்கு 1,96,000 மைல் வேகத்தில் கடந்து சென்றுள்ளது. அந்த மர்ம பொருள் அமெரிக்காவின் ஹவாயில் உள்ள பேன் ஸ்டார்ஸ்-1 தொலைநோக்கியில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து யூரி மில்னர் குழுவைச் சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் அவி லோப் கூறியபோது, “மர்ம பொருள் சிவப்பு நிறத்தில் சுமார் 400 மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தது. அது வேற்றுகிரக விண்கலமா என்பது குறித்து ஆய்வு செய்கிறோம். அந்த மர்ம பொருள் நமது தொலைநோக்கிகளின் கண்ணுக்கு புலப்படாத தொலைவுக்குச் சென்றுவிட்டது. எனினும் அமெரிக்காவின் கிரீன் பேங்கில் உள்ள உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி மூலம் மர்ம பொருளில் இருந்து ஏதாவது ரேடியோ சிக்னல்கள் கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x