Published : 28 Dec 2017 03:00 PM
Last Updated : 28 Dec 2017 03:00 PM

ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; பலர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 40 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இன்று (வியாழக்கிழமை) பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு 40 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர் என்று கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர், நஸ்ரத் ரகிமி கூறும்போது, முதலில் பெரிய குண்டு ஒன்று வெடித்தது. இதில்தான் பெருமளவு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தொடர்ச்சியாக சிறிய குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் இவற்றால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை தாலிபன்கள்தான் நிகழ்த்தியிருக்கக்கூடும் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சமீப காலமாக பொது மக்களுக்கு ஆபத்தான இடமாக கருதப்படுகிறது. தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகளும், தாலிபன்களும் தொடர்ந்து அப்பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கனில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஆறு பேர் பலியாகினர். இதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x