Published : 16 Nov 2017 02:25 PM
Last Updated : 16 Nov 2017 02:25 PM

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ஏராளமான இந்தியர்கள்

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியிலில் முகேஷ் அம்பானி குடும்பம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 680 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இவரைத் தவிர ஏராளமான இந்தியர்களும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

அசீம் பிரேம்ஜி, 1,26,720 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 11-வது இடத்தில் உள்ளார்.

ஹிந்துஜா குடும்பத்தின் சொத்து மதிப்பு 1,24,080 கோடி ரூபாய். ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இவர்கள் குடும்பம் 12-வது இடத்தில் உள்ளது. 14-வது இடத்தில், 1,13,520 கோடி ரூபாய் சொத்துக்களுடன் மிட்டல் குடும்பம் உள்ளது.

16-வது இடத்தில் உள்ள மிஸ்திரிஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு 1,06,260 கோடி ரூபாய். 19வது இடத்தில் உள்ள பிர்லா குடும்பத்தின் சொத்து மதிப்பு 93,060 கோடி ரூபாய்.

ஆசியாவின் 50 பணக்கார இந்தியர்கள் வரிசையில் 92,400 கோடி ரூபாயுடன் கோத்ரெஜ் 20-வது இடம், 61,380 கோடி ரூபாயுடன் பஜாஜ் 26-வது இடம் பிடித்துள்ளனர்.

இவர்களைத் தவிர பட்டியலில் உள்ள மற்ற இந்தியர்களின் விவரம்:

ஜிண்டால் (32-வது இடம்), பர்மன்ஸ் (35-வது இடம்), ஈச்சர் மோட்டார்ஸ் (36-வது இடம்), ஸ்ரீசிமெண்ட் (37-வது இடம்) ஷெகால் குடும்பம் (41-வது இடம்), வாடியா குடும்பம் (42-வது இடம்), டிஎல்எப் குஷால் பால் சிங் குடும்பம் (44-வது இடம்), காடிலா படேல் குடும்பம் (45-வது இடம்), பிரமால்ஸ் குடும்பம் (47-வது இடம், மூஞ்சால் குடும்பம் (48-வது இடம்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x