Last Updated : 17 Nov, 2017 12:20 PM

 

Published : 17 Nov 2017 12:20 PM
Last Updated : 17 Nov 2017 12:20 PM

‘பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை ட்ரம்ப் நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது’

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை ட்ரம்ப் நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து கருத்தரங்கத்தில் வியாழக்கிழமையன்று அமெரிக்க பாதுகாப்பு கொள்கைச் செயலாளர் ரூட் கூறும்போது, “பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை ட்ரம்ப் நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது. ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் தாலிபன்களுக்கு எதிராக நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தானில் செயல் பெரும் குறைப்பாடாக உள்ளது. இதுவரை ஆப்கானிஸ்தானில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 2,000 அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.

மற்றுமொரு பாதுகாப்புத் துறை அதிகாரி கூறும்போது,

பாகிஸ்தானுடன் ஐஎஸ் தீவிரவாதிகள், அல் கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளை தோற்கடிப்பது உள்ளிட்ட பரஸ்பர நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா ஒரு ஆக்கபூர்வமான உறவை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் நேர்மறையாக அணுசக்தி திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் அதன் பிராந்தியத்தில் தீவிரவாத குழுக்களுக்கு புகலிடம் அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானின் நலன்களில் நாங்கள் தீவிர அக்கறை கொண்டுள்ளோம்” என்றார்.

முன்னதாக, பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது எனக்கு தெளிவாக விளங்குகிறது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அரசாங்கம் வகுத்த வெளியுறவு கொள்கைகளின்படி இயங்காமல் தனக்கென தனியாக வெளியுறவுக் கொள்கைகள் வகுத்து இயங்குகிறது என்று அமெரிக்கா குற்றச்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x