Last Updated : 02 Nov, 2017 03:26 PM

 

Published : 02 Nov 2017 03:26 PM
Last Updated : 02 Nov 2017 03:26 PM

‘நியூயார்க் நகரில் தாக்குதல் நடத்தியவர் ஐஎஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்’

நியூயார்க் நகரில் தாக்குதல் நடத்திய சைபுல்லா சாய்போவ் ஐஎஸ் தீவிரவாதிகளின் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டவர் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூயார்க்கில் மன்ஹேட்டன் பகுதி ஹுஸ்டன் சாலையில் நேற்று பிற்பகல் வெள்ளை நிற சரக்கு லாரி ஒன்று அங்கிருந்த பாதசாரிகள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் 8 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதலை நடத்தியதாக சைபுல்லா சாய்போவ் என்பவரை அமெரிக்க போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக சைபுல்லா சாய்போவ்மீது தீவிரவாத குழுவுக்கு ஆதரவு அளித்தவர், வாகனங்களை சேதப்படுத்தியவர் என்ற வழக்குகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்திற்கு புதன்கிழமையன்று சக்கர நாற்காலியில் சைபொல்லா சைபொவ் அழைத்து வரப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ''சாய்போவ் தன் தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியுள்ளார். ஹாலோவீன் (Halloween) தினத்தன்று மக்கள் அதிகமாக சாலைகளில் கூடுவார்கள் என்று ஊகித்து அவர் சாலையில் வாகனத்தை செலுத்தியிருக்கிறார்.

மன ரீதியாக அழுத்தத்திலிருந்த சைபொவ் ஐஎஸ் தீவிரவாதிகளின் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இதுவே அவரை இந்தத் தாக்குதலை நடத்தத் தூண்டியுள்ளது'' என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x