Published : 28 Nov 2017 02:55 PM
Last Updated : 28 Nov 2017 02:55 PM

அமெரிக்க நடிகையை மணக்கும் இளவரசர் ஹாரி

இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை திருமணம் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பை திங்கட்கிழமையன்று இங்கிலாந்து அரசுக் குடும்பம் அறிவித்தது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி. 33 வயதான ஹாரி தன்னுடைய காதலியும், அமெரிக்க நடிகையுமான மெக்கல் மார்கலை அடுத்த வருடம் திருமண செய்ய இருப்பதாக இளவரசர் சார்லஸ் தெரிவித்தார்.

இவர்களது திருமணம் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திருமணம் குறித்த பிற விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இளவரசர் ஹாரியின் திருமணம் குறித்து அவரது சகோதரர் இளவரசர் வில்லியம் கூறும்போது, "ஹாரியின் திருமணத்தை உற்சாகத்தோடு எதிர்நோக்கி உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இளவரசர் ஹாரி மற்றும் மெக்கன் மார்கலின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த அரசுக் குடும்பம் விரும்பவில்லை என்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x